கட்டி முடிக்காத
கட்டிடத்தின் மேல்
பெரும் களைப்பில்
உறங்கிக்கொண்டிருக்கிறது
குட்டிபூனை
பொசு பொசு
முடிகளை வருடி
நகர்ந்துகொண்டே இருக்கிறது
காற்று
அலைகடலை
நாணல் நிலங்களை
கண்முன் நிறுத்தி.
ஞாயிறு, 11 செப்டம்பர், 2011
குழந்தைகள் சூல்ந்தவானம்
புதன், 31 ஆகஸ்ட், 2011
பாரதிஜிப்ரான் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு!
நேரம்
காலை
10 செப்டம்பர் · 10:00
இடம்
தேவநேய பாவாணர் நூலக சிற்றரங்கம் அண்ணா சாலை
அண்ணா சாலை
Chennai, India
வரவேற்பு :
மு.முருகேஷ்
"குழந்தைகள் சூழ்ந்த வானம்"
கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு!
நூல் குறித்து பேசுவோர்:
அ.வெண்ணிலா
எக்பர்ட் சச்சிதானந்தம்
தமிழ்மகன்
நன்றியுரை:
கன்னிக் கோவில் ராஜா
இணைய தள முகவரி:
www.bharathigibran.blogspot.com
www.bharathijibran.blogspot.com
இடம்
தேவநேய பாவாணர் நூலக சிற்றரங்கம் அண்ணா சாலை
அண்ணா சாலை
Chennai, India
வரவேற்பு :
மு.முருகேஷ்
"குழந்தைகள் சூழ்ந்த வானம்"
கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு!
நூல் குறித்து பேசுவோர்:
அ.வெண்ணிலா
எக்பர்ட் சச்சிதானந்தம்
தமிழ்மகன்
நன்றியுரை:
கன்னிக் கோவில் ராஜா
இணைய தள முகவரி:
www.bharathigibran.blogspot.com
www.bharathijibran.blogspot.com
ஞாயிறு, 13 மார்ச், 2011
பாரதிஜிப்ரான் கவிதைகள்
ஈரம் வேண்டியே
காத்துக் கிடக்கிறது
பெரும்நிலம்..
நலம் விசாரிக்கும்
பறவைகளுக்காகவே
கிளைபரப்புகிறது
மரங்கள்..
அன்பின் திசைநோக்கியே
சூழல்கிறது பூமி.
காத்துக் கிடக்கிறது
பெரும்நிலம்..
நலம் விசாரிக்கும்
பறவைகளுக்காகவே
கிளைபரப்புகிறது
மரங்கள்..
அன்பின் திசைநோக்கியே
சூழல்கிறது பூமி.
ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011
சனி, 29 ஜனவரி, 2011
குழந்தைகள் சூழ்ந்த வானம் 3
துயரத்தை சுமக்கசொல்கிறது
நெய்தல் வாழ்க்கை
பசி நிறைந்தவனின்
ரத்தத்தை எடுத்து
தன்னை நனைத்துக்கொள்கிறது
வங்கக்கடல்
மீன் பிடிக்கப்போய்
பிணங்களுடன் கரையொதுங்குகின்றன படகுகள்
வலைகளுடன் மீனவர்களின் நரம்புகளையும்
அருத்தெரிகின்றான் எதிரி
தந்தையை இழந்த குழந்தயின்
கண்ணீர்
கணவனை இழந்த மனைவியின்
தவிப்பு
மகனை இழந்த பெற்றோரின்
வலி
அலைகலென
திரும்ப திரும்ப வந்து கொண்டே இருக்கிறது
ராமேஸ்வர கரைகளில்.
நெய்தல் வாழ்க்கை
பசி நிறைந்தவனின்
ரத்தத்தை எடுத்து
தன்னை நனைத்துக்கொள்கிறது
வங்கக்கடல்
மீன் பிடிக்கப்போய்
பிணங்களுடன் கரையொதுங்குகின்றன படகுகள்
வலைகளுடன் மீனவர்களின் நரம்புகளையும்
அருத்தெரிகின்றான் எதிரி
தந்தையை இழந்த குழந்தயின்
கண்ணீர்
கணவனை இழந்த மனைவியின்
தவிப்பு
மகனை இழந்த பெற்றோரின்
வலி
அலைகலென
திரும்ப திரும்ப வந்து கொண்டே இருக்கிறது
ராமேஸ்வர கரைகளில்.
வெள்ளி, 21 ஜனவரி, 2011
முன் பனிக்காலம்
பூக்களை
உதிர்த்து விட்ட
மன வருத்தத்தோடே
அங்கும் இங்குமாய்
முகம் கட்டாமல்
அலைந்து கொண்டு இருக்கிறது
காற்று.
உதிர்த்து விட்ட
மன வருத்தத்தோடே
அங்கும் இங்குமாய்
முகம் கட்டாமல்
அலைந்து கொண்டு இருக்கிறது
காற்று.
குழந்தைகள் சூழ்ந்த வானம் 2
வானத்தை பூமிக்கு
அழைத்துவர
முயன்றுகொண்டிருக்கிறது
புகை நிரம்பிய
பனிக்காலத்தின் ஏரி.
அழைத்துவர
முயன்றுகொண்டிருக்கிறது
புகை நிரம்பிய
பனிக்காலத்தின் ஏரி.
வியாழன், 20 ஜனவரி, 2011
குழந்தைகள் சூழ்ந்த வானம்
வலி நிரம்பியே
வாழ வேண்டியிருக்கிறது
எப்போதும் யாரும் கடத்தப்படலாம்
வீடு திரும்புவது நிச்சயமில்லை
இதழ்களை மூடிக்கொண்டு
உம்மென்று இருக்கிறது
அந்தப் பள்ளத்தாக்கில்
அத்தனை பூக்களும்
துப்பாக்கிகளாய் மாற
நின்று கொண்டிருக்கிறன
வில்லோ மரங்கள்
ஒருபுறம் வன்முறையாளனும்
ஒருபுறம் படையாளனும்
கதவு தட்டுகிறான்
வீட்டிலிருக்கும் யாரையாவது கேட்டு
வன்முறையாளன்
வாசலோடு போய் விட
படையாளனின் அழுக்கேறிய
பூட்ஸ் கால்கள்
வீடு முழுக்க அச்சை பதித்தும்
அவன் கண்கள் அச்சத்தை
பதித்தும் வெளியேறுகின்றன
வீட்டிலிருந்து
எதையாவது எடுத்தும்
யாரையாவது இழுத்தும்
பிள்ளைகளின் கல்வி
பெருங்கனவாகிறது
ஜீலம் நதியில் சிலநேரம்
பிணங்கள் மிதக்கிறது
ஆசைகள்
விருப்பங்கள்
தேவைகள்
அனைத்தையும் ஓடித்துப்போட்டு
ஊரடங்கு பெரும் பேய்
முடக்கி வைக்கிறது
வீட்டிற்குள்ளேயே
பசியால் பகலும்
வலியால் இரவும்
கடந்து கொண்டிருக்க
இன்னமும் எப்படி
இனித்துக் கொண்டிருக்கிறது
காஷ்மீரின் ஆப்பிள்.
வாழ வேண்டியிருக்கிறது
எப்போதும் யாரும் கடத்தப்படலாம்
வீடு திரும்புவது நிச்சயமில்லை
இதழ்களை மூடிக்கொண்டு
உம்மென்று இருக்கிறது
அந்தப் பள்ளத்தாக்கில்
அத்தனை பூக்களும்
துப்பாக்கிகளாய் மாற
நின்று கொண்டிருக்கிறன
வில்லோ மரங்கள்
ஒருபுறம் வன்முறையாளனும்
ஒருபுறம் படையாளனும்
கதவு தட்டுகிறான்
வீட்டிலிருக்கும் யாரையாவது கேட்டு
வன்முறையாளன்
வாசலோடு போய் விட
படையாளனின் அழுக்கேறிய
பூட்ஸ் கால்கள்
வீடு முழுக்க அச்சை பதித்தும்
அவன் கண்கள் அச்சத்தை
பதித்தும் வெளியேறுகின்றன
வீட்டிலிருந்து
எதையாவது எடுத்தும்
யாரையாவது இழுத்தும்
பிள்ளைகளின் கல்வி
பெருங்கனவாகிறது
ஜீலம் நதியில் சிலநேரம்
பிணங்கள் மிதக்கிறது
ஆசைகள்
விருப்பங்கள்
தேவைகள்
அனைத்தையும் ஓடித்துப்போட்டு
ஊரடங்கு பெரும் பேய்
முடக்கி வைக்கிறது
வீட்டிற்குள்ளேயே
பசியால் பகலும்
வலியால் இரவும்
கடந்து கொண்டிருக்க
இன்னமும் எப்படி
இனித்துக் கொண்டிருக்கிறது
காஷ்மீரின் ஆப்பிள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பின்பற்றுபவர்கள்
Recent Comments
வலைப்பதிவு காப்பகம்
லேபிள்கள்
- "மழை தினம்" கவிதை தொகுப்பு (7)
- ஹைக்கூ (7)