துயரத்தை சுமக்கசொல்கிறது
நெய்தல் வாழ்க்கை
பசி நிறைந்தவனின்
ரத்தத்தை எடுத்து
தன்னை நனைத்துக்கொள்கிறது
வங்கக்கடல்
மீன் பிடிக்கப்போய்
பிணங்களுடன் கரையொதுங்குகின்றன படகுகள்
வலைகளுடன் மீனவர்களின் நரம்புகளையும்
அருத்தெரிகின்றான் எதிரி
தந்தையை இழந்த குழந்தயின்
கண்ணீர்
கணவனை இழந்த மனைவியின்
தவிப்பு
மகனை இழந்த பெற்றோரின்
வலி
அலைகலென
திரும்ப திரும்ப வந்து கொண்டே இருக்கிறது
ராமேஸ்வர கரைகளில்.
சனி, 29 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பின்பற்றுபவர்கள்
Recent Comments
வலைப்பதிவு காப்பகம்
லேபிள்கள்
- "மழை தினம்" கவிதை தொகுப்பு (7)
- ஹைக்கூ (7)
1 கருத்து:
கால காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும்
தமிழர்களின் கவலைகளை
கவிதை நயத்துடன் கூறியுள்ளீர்.அருமை.
கருத்துரையிடுக