பக்கங்கள்

புதன், 29 டிசம்பர், 2010

பாரதிஜிப்ரான் கவிதைகள்

தொடர் மழை நாளுக்கு
பின்பான வெயிலிலும்
கடும் குளிர் இரவுகளில்
வெது வெதுப்பான தேனீரிலும்
நிறைந்திருக்கிறது
வாழ்வின் இதம் .
......
தாழ்த்தப்பட்டவன்
நுழையாத ஊருக்குள்
நுழைகிறது
அவன் வியர்வையை உதிரத்தை
நீராக்கி..
அவன் மலத்தை உரமாக்கி
விளைந்த காய்கறிகள் .

செவ்வாய், 28 டிசம்பர், 2010

bharathigibran kavithaikal

விதைகளற்ற
காய் கனிகளை
உடைத்துப்பார்த்தேன்
அதனுள் சுழல்கிறது
ஒரு மலட்டு உலகம்.
ஒடிந்து விழுந்த
மேசையொன்றில்
புதைந்து கிடந்தது
கோடிப்பறவைகள்
கூடி மகிழ்ந்த
கனத்தக்காடொன்று.

kavithaikal

கவிதைப் புத்தகங்கள்
நிரம்பிய அலமாரியில்
கூடுகட்டிய வண்டுகள்
எங்கள் உறக்கத்திற்கு
பின்பன இரவுகளில்
வெளியே செல்கின்றன
கவிதைபாட..
கண்ணிமைக்காமல்
வண்டுகளின் பாடலில்
மயங்கிக்கிடக்கிறது இரவு .
கடவளுக்கான சண்டையில் 
நிறைய இழந்து விட்டோம் 
மனிதர்களை. 

பின்பற்றுபவர்கள்

மின்னஞ்சல்: bharathijibran@gmail.com

இந்த கவிதைப் பூக்களை உங்கள் மினனஞ்சல் பூக் கூடையில் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

web site tracking statistics
Clicky Web Analytics

இந்த கவிதைப் பூக்களை உங்கள் மினனஞ்சல் பூக் கூடையில் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழில் எழுத....


Recent Comments