வலி நிரம்பியே
வாழ வேண்டியிருக்கிறது
எப்போதும் யாரும் கடத்தப்படலாம்
வீடு திரும்புவது நிச்சயமில்லை
இதழ்களை மூடிக்கொண்டு
உம்மென்று இருக்கிறது
அந்தப் பள்ளத்தாக்கில்
அத்தனை பூக்களும்
துப்பாக்கிகளாய் மாற
நின்று கொண்டிருக்கிறன
வில்லோ மரங்கள்
ஒருபுறம் வன்முறையாளனும்
ஒருபுறம் படையாளனும்
கதவு தட்டுகிறான்
வீட்டிலிருக்கும் யாரையாவது கேட்டு
வன்முறையாளன்
வாசலோடு போய் விட
படையாளனின் அழுக்கேறிய
பூட்ஸ் கால்கள்
வீடு முழுக்க அச்சை பதித்தும்
அவன் கண்கள் அச்சத்தை
பதித்தும் வெளியேறுகின்றன
வீட்டிலிருந்து
எதையாவது எடுத்தும்
யாரையாவது இழுத்தும்
பிள்ளைகளின் கல்வி
பெருங்கனவாகிறது
ஜீலம் நதியில் சிலநேரம்
பிணங்கள் மிதக்கிறது
ஆசைகள்
விருப்பங்கள்
தேவைகள்
அனைத்தையும் ஓடித்துப்போட்டு
ஊரடங்கு பெரும் பேய்
முடக்கி வைக்கிறது
வீட்டிற்குள்ளேயே
பசியால் பகலும்
வலியால் இரவும்
கடந்து கொண்டிருக்க
இன்னமும் எப்படி
இனித்துக் கொண்டிருக்கிறது
காஷ்மீரின் ஆப்பிள்.
வியாழன், 20 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பின்பற்றுபவர்கள்
Recent Comments
வலைப்பதிவு காப்பகம்
லேபிள்கள்
- "மழை தினம்" கவிதை தொகுப்பு (7)
- ஹைக்கூ (7)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக