தொடர் மழை நாளுக்கு
பின்பான வெயிலிலும்
கடும் குளிர் இரவுகளில்
வெது வெதுப்பான தேனீரிலும்
நிறைந்திருக்கிறது
வாழ்வின் இதம் .
......
தாழ்த்தப்பட்டவன்
நுழையாத ஊருக்குள்
நுழைகிறது
அவன் வியர்வையை உதிரத்தை
நீராக்கி..
அவன் மலத்தை உரமாக்கி
விளைந்த காய்கறிகள் .
புதன், 29 டிசம்பர், 2010
செவ்வாய், 28 டிசம்பர், 2010
bharathigibran kavithaikal
விதைகளற்ற
காய் கனிகளை
உடைத்துப்பார்த்தேன்
அதனுள் சுழல்கிறது
ஒரு மலட்டு உலகம்.
காய் கனிகளை
உடைத்துப்பார்த்தேன்
அதனுள் சுழல்கிறது
ஒரு மலட்டு உலகம்.
kavithaikal
கவிதைப் புத்தகங்கள்
நிரம்பிய அலமாரியில்
கூடுகட்டிய வண்டுகள்
எங்கள் உறக்கத்திற்கு
பின்பன இரவுகளில்
வெளியே செல்கின்றன
கவிதைபாட..
கண்ணிமைக்காமல்
வண்டுகளின் பாடலில்
மயங்கிக்கிடக்கிறது இரவு .
நிரம்பிய அலமாரியில்
கூடுகட்டிய வண்டுகள்
எங்கள் உறக்கத்திற்கு
பின்பன இரவுகளில்
வெளியே செல்கின்றன
கவிதைபாட..
கண்ணிமைக்காமல்
வண்டுகளின் பாடலில்
மயங்கிக்கிடக்கிறது இரவு .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பின்பற்றுபவர்கள்
Recent Comments
வலைப்பதிவு காப்பகம்
லேபிள்கள்
- "மழை தினம்" கவிதை தொகுப்பு (7)
- ஹைக்கூ (7)